நெல்லையில் கூலி தொழிலாளி குளியலறையினுள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் கோழி கடையில் பணிபுரியும் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். அங்கு திடீரென்று தவறி விழுந்ததால் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.