Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்து 8 வயது குழந்தை… வேடிக்கை பார்க்கப் போன 15 பேர் கிணற்றில் விழுந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தையை காப்பாற்ற முயன்ற கிராம மக்களில் சிலர் கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோதா என்ற பகுதியில் 8 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால் அது இடிந்து விழுந்தது. இதையடுத்து சுவற்றின் ஓரத்தில் ஒட்டி நின்ற 15க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநில மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். கிணற்றிலிருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் மற்றவர்களை காப்பாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |