Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்த இளைஞர் உயிர் பிழைக்க… காப்பாற்ற குதித்த 3 நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்… கதறும் மனைவி…!!!

செல்பி எடுக்கும் பொழுது கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 3 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த லோகேஷ் என்பவரின் மனைவி பிரியா. இவர்கள் தங்களது நண்பர்களான யுவராஜ், பாலாஜி, கார்த்திக் என்ற மூன்று பேருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உப்பலமடுகு அருவிக்கு சென்றுள்ளனர். அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் அனைவரும் அருகில் உள்ள கால்வாய் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது யுவராஜ் செல்பி எடுக்க முயன்ற போது கால்வாயில் தவறி விழுந்தார்.

அவரை காப்பாற்றுவதற்காக மற்ற நண்பர்களும் கால்வாய்க்குள் குதித்துள்ளனர். ஆனால் தவறி விழுந்த யுவராஜ் கால்வாயில் உள்ள செடிகளை பிடித்து கரை வந்து சேர்ந்தார். ஆனால் அவரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து பிரியா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, கால்வாயில் மூழ்கி உயிரிழந்த கணவன் உட்பட இரண்டு நண்பர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

Categories

Tech |