Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தவறுதலாக வந்த அழைப்பு” மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை காணவில்லை என அவரது தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி ஒரு வாலிபருடன் நாகப்பட்டினம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரையும் மாணவியையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் முட்டைக்காடு சரல் விலை பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான அஜித் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரின் செல்போன் எண்ணிற்கு பதிலாக அஜித் மாணவியின் செல்போன் எண்ணை தவறுதலாக தொடர்பு கொண்டுள்ளார்.

அதிலிருந்து அஜித் மாணவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியுள்ளார். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அஜித் மாணவியை கடத்தி சென்று வாடகை வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |