பிக் பாஸ் மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 5-வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் என மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை அசல் கோளாறு, சாந்தி, செரீனா, மகேஸ்வரி என 4 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஜிபி முத்து வெளியேறினார். இந்நிலையில் வெளியேறிய மகேஸ்வரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் எந்தவிதமான கவலையும் இல்லை. மேலும் மக்களின் ஆதரவிற்கு நன்றி. இதுபோல் மக்கள் எனக்கு எப்போதும் ஆதரவளிக்க வேண்டும் என அந்த வீடியோவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பொதுமக்கள் மகேஸ்வரிக்கு பதிலாக வேறு ஒருவரை வெளியேற்றி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.