Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறை ஒப்புக்கொண்ட ஸ்டாலின்…! இவரே மாதிரி CMயை பாக்கவே முடியாது… விமர்சனத்துக்குள் சிக்கிய திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, பொங்கல் பரிசு 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பிற்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1159 கோடி ரூபாய்.நான் பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வது என்னவென்றால், அவர்கள் கொடுத்த பொருட்கள் மொத்த விலையில் கூட வாங்கத் தேவையில்லை.

சில்லறை விலையில் கடையில் வாங்கி அந்த பொருளை அடுக்கினாலே ஒட்டுமொத்தமாக  அந்த 21 பொருளின் உடைய விலை 350 ரூபாய்க்குள் அடக்கமாகி விடுகிறது. 1159கோடி ரூபாய்  என்று வருகின்ற போது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரிக்கின்ற பொழுது 520 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு வருகின்றது. 350 ரூபாய் போக மீதி கிட்டத்தட்ட 229ரூபாய் ஒரு அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரசு நிதியிலிருந்து 229 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான் தெளிவாகக் கூறுகிறேன் இது மொத்த விற்பனையில் வாங்கக்கூடிய விலை அல்ல. சில்லறை விலையில்  வாங்குகின்ற பொழுதே இவ்வளவு தான் வருகிறது.எவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு இந்த அரசு, இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக எங்கள் மீது பழியை போட்டு கொண்டிருக்கிறார்கள். இன்று எங்களுடைய தர்மபுரி மாவட்ட கழக செயலாளரை குறிவைத்து, திசைதிருப்புவதற்காக அவர் மீது வழக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள். எந்த வழக்காக இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  எதிர்கொள்ளும். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.

மக்களுக்கு கொண்டு சேரக்கூடிய பரிசுப் பொருள்களில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது, அதில் அரசு தோல்வி அடைந்திருக்கிறது. ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்திய பொழுது மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக நான் இதை ஆய்வு செய்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன் என்று உத்தரவு பிறப்பிக்கிறார். அப்படி என்றால் அவர் உத்தரவு பிறப்பிக்கிறார் என்று சொன்னால் அங்கே தவறு நடந்திருக்கிறது என்ற உண்மையை அவரே ஒத்துக்கொள்கிறார்.

தன்னுடைய அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் செய்கின்றவற்றில் தவறு இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டு, ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன முதலமைச்சர் அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அவர்கள் மீதும், துறை ரீதியான அமைச்சர்களின் மீதும், அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை….  சொன்னதோடு நிறுத்தி கொண்டார் என தெரிவித்தார்.

Categories

Tech |