Categories
தேசிய செய்திகள்

தாக்கத்தில் தவித்த பாம்பு…. தண்ணீர் கொடுத்த இளைஞர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தாகத்தில் தவித்த பாம்பிற்கு இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா நந்து என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு அந்த வீடியோவில் பச்சை நிறத்திலான பாம்பு ஒன்று தாகத்தால் தவிப்பதாகவும், அதற்கு அந்த இளைஞர் தனது கைகளில் நீரை ஊற்றி பாம்பின் தாகத்தை தீர்ப்பாதாகவும் அந்த வீடியோவில் உள்ளது.

மேலும் பாம்பானது தாகம் தீர்ந்தவுடன், தண்ணீர் குடிப்பதை நிறுத்தி கொள்கின்றது. இவ்வாறு அந்த வீடியோவானது பலரின் கவனத்தை பெற்று தற்போது இணையத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.  இதனை தொடர்ந்து அந்த வீடியோவின் தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி  ஒரு விழிப்புணர்வு பதிவையும் இந்திய வனத்துறை அதிகாரி  பதிவு செய்துள்ளார்.

அதில், “கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைக்கவும், அது பல விலங்குகள் உயிர் வாழ வழி வகை செய்யும்” என பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/i/status/1501586922380021764

Categories

Tech |