அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நித்தியானந்தம் மற்றும் குமரேசனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே நித்தியானந்தம் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இந்நிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நித்யானந்தம் தனக்கு 14 வருட நண்பர் எனவும் மக்கள் நலன் கருதியே அவர் தன்னைத் தாக்கியதாகவும் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மூர்த்திக்கு காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கிருமி நாசினியை வழங்கி கொரோனா குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.