Categories
உலகசெய்திகள்

“தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க தலிபான்கள் அரசு எதுவும் செய்யவில்லை”… ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல்…!!!!

ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிப்பணி அமைப்பு காபூலில் உள்ள அதன் உரிமை குழுக்கள் மூலமாக உதவுவதாக கூறியுள்ளது.

மேலும் பலியானவர்களின் சரியான எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் காபபூலில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில் தலிபான் தலைமையிலான வெளியூர் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இது மசூதிகள் கல்வி நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களின் மீது தீய வட்டங்களால் நடத்தப்பட்ட ஒரு செயலாகும் இது ஆப்கானிஸ்தான் மக்களின் எதிரிகளின் சக்தியால் மேற்கொள்ளப்பட்ட செயலாகும் என கூறியுள்ளது.

மேலும் கல்வி நிலையங்களில் அப்பாவி மாணவர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் ஆப்கானிஸ்தான் ஷியா முஸ்லிம் இன குழுவினர் ஹசாரா பெரும்பான்மையினர் தொடர்ந்து பாகுபாடு மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை ஆப்கான் அரசாங்கங்களால் எதிர்கொண்டவர் 1990களில் தலிபான்கள் சியா பிரிவினரை குறி வைத்து கொலைகள் மற்றும் பிற கடுமையான துஷ்பிரயோகங்களை அரங்கேற்றியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் விரிவான ஆப்கானிஸ்தானில் ஹசாரா பிரிவு மக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் மீது மசூதிகள் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் வைத்து பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த சிறுபான்மை சமூகங்கள் மீதான தற்கொலை படை குண்டு வெடிப்பு மற்றும் பிற சட்ட விரோத தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தலிபான் அரசு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |