Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய உக்ரைன்…. எரிந்து கடலில் மூழ்கிய ரஷ்யக் கப்பல்…. வெளியான புகைப்படம்…..!!!!!

உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணைதாக்குதலில் சிக்கி கடலில் மூழ்கிய ரஷ்யாவின் அதிநவீன மாஸ்க்வா போர்க் கப்பலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கருங்கடலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க் கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணையால் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது. அதேநேரம் மாஸ்க்வாவில் தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்து சிதறியதாகவும், கப்பலை துறைமுகத்திற்கு கட்டியிழுத்து செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும் , கப்பலில் எப்படி தீ ஏற்பட்டது என்ற விபரத்தை ரஷ்யா தெரிவிக்கவில்லை.

அதன்பின் போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று ரஷ்யபாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதனை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ரஷ்ய போர்க் கப்பல் தாக்கப்பட்டு கடலில் மூழ்கியதை உறுதிப்படுத்தும் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் வெளியாகாமல் இருந்த சூழ்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தாக்குதலுக்கு பின் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் மாஸ்க்வா கொளுந்து விட்டு எரிந்தபடி கடலில் மூழ்குவதை காட்டுகிறது.

Categories

Tech |