திருக்காட்டுப்பள்ளி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். 66 வயதான இவர் விவசாயி ஆவார். வெகுநாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி குணமாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வயிற்றுவலி குணமாகவில்லை இதனால் மனமுடைந்த ஞானப்பிரகாசம் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டபின் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்பு காவல்துறையினர் ஞானப் பிரகாசத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.