கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவளர்நல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற 18 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பவித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.