Categories
சினிமா

தாங்க முடியாத வலி…. ஆப்ரேஷன் செய்துகொண்ட பிரபாஸ்…. ரசிகர்கள் பிராத்தனை….!!

‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் ‘சலார்’ என்ற தெலுங்கு படத்தில்  நடித்து வந்தார். இதில் எதிர்பாராவிதமாக  பலத்த காயம் அடைந்த  பிரபாசை  அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று பிரபாசுக்கு  அறிவுரை கூறினார்.
ஆனால் கைவசம் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு படங்கள் இருந்ததால் ஆப்ரேஷன் செய்வதற்கு பிரபாஸ் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பிரபாசுக்கு திடிரென்று அடிபட்ட இடத்தில் வலி ஏற்படவே மருத்துவரின் அறிவுரை படி வெளிநாட்டிற்கு சென்று ஆப்ரேஷன் செய்து கொண்டார். இதனால் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |