இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அரசபட்டி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூசாமணி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பூசாமணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூசாமணிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் பூசாமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.