Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்வாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஷாலினியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷாலினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |