Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. சடலமாக தொங்கிய பெண்…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட செந்தாமரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக செந்தாமரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தாமரை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |