Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலை வலியால் அவதிப்பட்ட சக்திவேல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலை வலி குறையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |