வயிற்று வலியால் பெண் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முருகேஸ்வரி தனது வீட்டில் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த முருகேஸ்வரியை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து முருகேஸ்வரியின் தாயாரான லட்சுமி குலசேகரன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.