வயிற்று வலி காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி பகுதியில் முத்துக்குமார்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் செந்தாமரைக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி பிரச்சனை இருந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலியை தாங்க முடியாத செந்தாமரை வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் செந்தாமரையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.