கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூங்கம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்து சிலம்பரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலம்பரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.