Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கியில் பாண்டி துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் பாண்டிதுரை சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டி துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |