தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளிகவுண்டம்பாளையத்தில் கூலி தொழிலாளியான முத்துவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முத்துவேல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.