Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை…. ஜெராக்ஸ் கடைக்கு சீல்…. பொருட்களுக்கும் பறிமுதல்….!!

ஊரடங்கு விதிமுறையை மீறி திறக்கட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்த தாசில்தார் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடானை, தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக மருந்து கடைகள் மற்றும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது திருவாடானை, தொண்டி மற்றும் என்.மங்கலம் போன்ற பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடையை மீறி கடையை திறந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் அங்கிருந்த எலக்ட்ரானிக் தராசு, எடை இயந்திரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் எம்.ஆர். பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தடையை மீறி திறந்து வைத்து இருந்த ஜெராக்ஸ் கடையையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபர்களையும் பிடித்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

Categories

Tech |