Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. என்ன காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் நேரு நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி அரசு நீர்வளத்துறையினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். எனவே உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கநாதன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அனைவரும் போராட்டத்தை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |