Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாசில்தார் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்… நடந்தது என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசிலராக கார்த்திகேயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றிவிட்டு ராசிபுரம் வந்தார். அதன் பிறகு அவர் தனது மகனுடன் ராசிபுரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.கே. சமுத்திரம் பகுதியில் சென்ற போது கார் வயர் உருகி விழுந்ததாக கூறப்படுகிறது.

மேலும் காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக துரிதமாக செயல்பட்டு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு 2 பேரும் இறங்கி விட்டனர். இதனையடுத்து கார் முழுவது தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |