Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாசில்தார் மீது நடவடிக்கை எடுங்க” வழக்கறிஞர்களின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் வழக்கறிஞரான வீரமுத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி அரிமளம் காவல்நிலையத்தில் வீரமுத்து மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வீரமுத்து மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திருமயம் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கறிஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |