சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ‘ஹீரோ’ படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
Wow style's look @Siva_Kartikeyan Anna waiting for #DON pic.twitter.com/pTzGBfNvF4
— Cinetrends (@Cinetrendssk) September 6, 2021
மேலும் சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, காளி வெங்கட், சிவாங்கி, பால சரவணன், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தாஜ்மஹாலில் டான் படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.