தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
உலக அதிசயங்களில் மிக முக்கிய ஒன்று தாஜ்மஹால். இது இந்தியாவின் நினைவுச்சின்னமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து தாஜ்மஹாலில் சுற்றி பார்க்க வந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் தாஜ்மஹால் வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டது.
தாஜ்மஹால் முழுவதும் சல்லடை போட்டு வெடிகுண்டை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச காவல்துறையின் அவசர உதவி எண் 112 க்கு போன் செய்து பேசிய மர்ம நபர் தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கூறினார். இதை அடுத்து தாஜ்மஹால் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அங்கு சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.