உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக திடீர் மிரட்டல் வந்தது. அதனால் தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மர்ம நபர் ஒருவர் உத்திரப்பிரதேச காவல் துறையை தொடர்பு கொண்டு காலை 9 மணிக்கு தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
உடனே எச்சரித்து கொண்ட போலீசார் பார்வையாளர்களை வெளியேற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.