உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஒருவர் 3 முறை விற்பனை செய்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நட்வர் லால் என்பவர் யாருடைய கையெழுத்தை வேண்டுமானாலும் அப்படியே போடுவதில் கில்லாடி ஆவார். இவர் மற்றவர்களுடைய கையெழுத்தைப் போட்டு ஏராளமான மோசடிகள் செய்துள்ளார். இந்நிலையில் நட்வர் லால் போலியான அரசு பத்திரம் தயார் செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் தாஜ்மஹாலை 3 முறை விற்பனை செய்துள்ளார். அவர்களும் தாஜ்மஹாலை வாங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி செங்கோட்டை மற்றும் பாராளுமன்றத்திற்கும் போலியான பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்துள்ளார்.
இவர் பாராளுமன்றத்தை விற்பனை செய்யும் போது எம்.பி களையும் சேர்த்து விற்பனை செய்துள்ளார். இப்படி பல மோசடிகளை செய்த நட்வர் லாலுக்கு 113 வருடங்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் இவர் சிறையில் இருக்கும் போது 10 தடவைக்கு மேல் சிறையில் இருந்து தப்பித்துள்ளார். இவருக்கு 84 வயது ஆகும்போது ரயில்வே நிலையத்தில் தன்னை சுற்றி 10 காவலர்கள் இருக்கும்போது தப்பித்து ஓடிவிட்டார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு இறந்து விட்டதாக கூறினர். ஆனால் சிலர் கடந்த 2007-ம் ஆண்டு தான் நடவர் லால் இறந்ததாக கூறுகின்றனர். மேலும் நட்வர் லால் பல மோசடி வேலைகளை செய்து இருந்தாலும் அவருடைய ஊரில் அவரை ஒரு ஹீரோவாகவே பார்க்கின்றனர்.