காதல் சின்னமான தாஜ்மஹாலின் நுழைவு கட்டணம் உயர்வால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
டெல்லி ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹால் உள்ளது. இதனை சுற்றிப்பார்க்க பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டம் என்பதால் மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது திறக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றி பார்ப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஆக்ரா மண்டல ஆணையர் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 50 ரூபாயிலிருந்து 80ரூபாயாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 1100 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதான கோபுர வாசலுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு 200 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 400 ரூபாய் வாங்கப்படுகிறது. மொத்தமாக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 480 ரூபாயும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 1600 ரூபாயும் வாங்கப்படுகிறது. இந்த கட்டண ஏற்றத்தால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.