Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வந்த ட்ரம்ப் ….. இங்கு பார்க்காமல் சென்றது ஏன் ? அதிர்ச்சியில் பாஜகவினர் ….!!

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து இங்கு வரவில்லையே என்று பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள சபர்மதி (காந்தி) ஆசிரமம்  சென்று அங்கே பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக விளங்கக்கூடிய சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைத்தை திறந்து வைத்து அங்கு நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் உத்தரப்பிரதேசத்தில் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மஹாலை ஆக்ரா சென்று பார்வையிட்ட ட்ரம்ப் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் 1 மணி நேரம் கண்டுகளித்தார். இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கிய ட்ரம்ப் முதல்நாள் பயணத்தை முடித்துக் கொண்டார்.

இதையடுத்து இரண்டாம் நாள் பயணமான இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படை அணிவகுப்பை ஏற்க்கொண்ட  ட்ரம்ப் காந்தி சமாதிக்கு மரியாதையை செலுத்தினார். அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பெங்களூர் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சில ஒப்பந்தங்களில் கையொப்பம்யிட்டு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதே போல ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப் டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதற்க்கு பின் பல்வேறு நிகழ்வுகளில் ட்ரம்ப் பங்கேற்க இருக்கையில் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் வரை வந்த அதிபர் ட்ரம்ப் , பிரதமர் மோடியால் 2018ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்க்காமல் போனது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக கருதப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை 182 உயரங்களை கொண்டது. இந்தியாவின் அமைதிக்கான சிலை , ஒற்றுமைக்கான சிலை என்று அழைக்கப்படும் இந்த சிலையை ட்ரம்ப் புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி சாமானியரிடம் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்ட இந்த சிலையை பார்க்காத அதிபர் ட்ரம்ப் , உத்தரபிரதேச பாஜக அரசால் புறக்கணிக்கப்படும்  தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளார். உலக  அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால் சென்ற ட்ரம்ப் மோடி கட்டி , திறந்த சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு வரவில்லை என்று பாஜகவினர் வேதனை அடைந்துள்ளனர்.

அதேபோல தாஜ்மஹால் பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கே ட்ரம்ப் செல்வதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதிபரின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. இந்தியா என்றால் சர்தார் வல்லபாய் படேல் சிலை என்று சொல்ல ஆரம்பித்திருக்கும் வேளையில் ட்ரம்ப் வருகையால் உலக அளவில் தாஜ்மஹால் என்ற பிம்பம்  தான் இந்தியாவின் அடையாளம் என்று உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

Categories

Tech |