உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அனைவரும் உங்கள் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாஜ்மஹாலை காண வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை ஆட்டிப்படைக்கும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் முதல் நடவடிக்கையாக தாஜ்மஹாலுக்கு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.