Categories
மாநில செய்திகள்

தாட்கோ மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி…. கட்டணம் கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!!

தாட்கோ திட்டம் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத காலம் வரை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக சென்னை கலெக்டர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களுடைய தகுதிக்கு ஏற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியை மேற்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ இணையதளமான http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாங்கள் விரும்பும் பயிற்சிகளை இலவசமாக பயிலலாம். பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |