Categories
சினிமா தமிழ் சினிமா

தாதாவாக மிரட்டும் துருவ் விக்ரம்… வைரலாகும் ‘மகான்’ பட வீடியோ…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இருக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகான் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரமின் போஸ்டர் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் துருவ் விக்ரம் தாதா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது இந்த அட்டகாசமான போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |