பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் தாத்தாவின் இறுதி சடங்கின் போது ஒன்றாக இணைந்து சென்ற காட்சிகள் வெளியாகிள்ளது.
பிரிட்டன் மகாராணி கணவர் பிலிப்பின் மரணம் பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரை குறித்த நினைவலைகள் எழுந்தது. மேலும் அவரின் மரணம் குறித்த செய்திகள் வெளியான போதெல்லாம் மக்களின் மனதில் இன்னொரு கேள்வியும் எழுந்தது மறுப்பதற்கில்லை. அது என்னவென்றால் பிலிப்பின் இறுதி சடங்கின் போதாவது ஹரியின் மனைவியான மேகனால் பிரிந்த ராஜ குடும்பம் மீண்டும் இணையுமா என்ற கேள்விகள் எழுந்தது.
ஆனால் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மக்களின் விரும்பம்போலவே இளவரசர் ஹரி ,வில்லியம் மற்றும் வில்லியமின் மனைவி கேட் மூவரும் ஒன்றாக இணைந்து கால்நடையாக நடந்து சென்றுள்ளனர் .