Categories
தேசிய செய்திகள்

தாத்தாவுக்காக ஆசையாக சமைத்த பேத்திக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!!!

ருன்ஜுன் மிஸ்ரா என்ற மருத்துவர் ஒருவர், இந்திய உணவை மட்டுமே விரும்பி உண்ணும் தன் தாத்தாவுக்கு மெக்சிகன் சாப்பாடு செய்து கொடுத்தார். அந்த உணவை தாத்தா விரும்பி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அத்துடன் இது போன்ற வித்தியாசமான உணவு வகைகளை முயற்சிக்க விரும்பினார். இந்நிலையில் தன் பேத்தியின் அடுத்த இந்திய பயணத்திற்கு முன்னதாகவே அவர் காலமானார். எதிர்பாராத வகையில் அவருடைய பேத்தி அந்த தத்தாவுக்காக தயாரித்த கடைசி உணவாக மாறிவிட்டது.

இது தொடர்பாக ருன்ஜுன் மிஸ்ரா கூறியிருப்பதாவது, “என் நானா (தாய்வழி தாத்தா) காரமான உணவுகளை விரும்புவதில்லை. இதனால் நான் அடுத்தமுறை அவரை காண இந்தியாவில் உள்ள வீட்டிற்கு வரும்போது அருமையாக சமைக்கும் உணவான அடோபோ சாஸ், சிபொட்டில் மிளகுத்தூள் தூக்கலாக செய்து, அவருக்காக கூடுதலாக இன்னும் சில டப்பாக்களில் அடைத்துகொண்டு வரச் சொன்னார். ஆனால் அதற்குள் அவர் மறைந்து விட்டார். இந்த பதிவை காண்பவர்கள் உங்கள் தாத்தா-பாட்டிக்களை அணைத்து கொள்ளுங்கள்” என அவர்  பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |