Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாத்தாவுடன் சென்ற பேத்திகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி தாத்தாவும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பேத்திகளான இனியா, அஸ்வினி ஆகியோருடன் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இனியா தண்ணீரில் மூழ்கினாள். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் தனது பேத்தியை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர்.

இதனை பார்த்த அஸ்வினி கரையில் அமர்ந்தவாறு என்ன செய்வது என அறியாமல் அழுது கொண்டிருந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செல்வராஜ் மற்றும் இனியா ஆகிய 2 பேரின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேத்தி மற்றும் தாத்தாவின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |