Categories
உலக செய்திகள்

தாத்தாவுடன் மீன் பிடிக்க சென்ற குழந்தை.. வனப்பகுதியில் மாயம்.. 3 நாட்களுக்கு பின் போராடி மீட்ட காவல்துறையினர்..!!

கனடாவில் தாத்தாவுடன் மீன் பிடிக்க சென்ற 3 வயது குழந்தை காட்டில் மாயமாகிய 3 நாட்களில் போராடி காவல்துறையினர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவின் கிழக்கு ஒன்றாரியோ என்ற பகுதியில் இருக்கும் வனப்பகுதி ஒன்றிற்கு Jude Leyton என்ற 3 வயது சிறுவன், தன் தாத்தா chris fisher உடன் சென்றுள்ளார். அப்போது chris ஊஞ்சல் ஒன்றை செய்து கொண்டிருந்த சமயத்தில் குழந்தை மாயமாகியுள்ளது. இதனால் பதறிப்போன தாத்தா உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின்பு காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர், தன்னார்வலர்கள், ஹெலிகாப்டர் மற்றும் ஆழ்கடல்  நீந்துபவர்கள் என்று அனைவருடன் சிறுவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்த பின்பும் சிறுவன் கிடைக்கவில்லை. மேலும் மூன்றாவது நாளும் கண்டுபிடிக்க படாததால் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அதாவது 3 வயதே ஆன குழந்தை மூன்று நாட்களுக்கு பிறகு எவ்வாறு காட்டில் இருக்க முடியும் என்று குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருந்த நிலையில், Const. Scott MC Names (19) என்பவரின் தலைமையில் ஒரு காவல்துறையினரின் குழு ஒரு பகுதியில் சிறுவனை தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டேயிருந்துள்ளது.

அந்த சமயத்தில் Scott நீல நிற ஜாக்கெட் ஒன்றைக்கண்டு அதன் அருகே தன் குழுவினருடன் சென்றுள்ளார். மேலும் “Jude, Jude” என்று கத்திக்கொண்டே சென்ற போதும் குழந்தை அசையாததால் ஒருவிதமான பயத்துடன் அருகில் நெருங்கியுள்ளனர். ஆனால் குழந்தை தாகம் மற்றும் களைப்புடன் இருந்தாலும் பத்திரமாக அமர்ந்திருந்ததை கண்டவுடன் ஆச்சரியத்துடன் சிறுவனை தூக்கி வந்துள்ளனர்.

கையில் குழந்தையுடன் காட்டிலிருந்து குழுவினர் வருவதைக்கண்ட Jude ன் பெற்றோரில் இருந்து தூரத்து உறவினர்கள் வரை அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர். மேலும் குழந்தையை தெரியாமல் தவறவிட்ட தாத்தாவோ அவனை கண்ட பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.  தற்போது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |