Categories
சினிமா தமிழ் சினிமா

தாத்தா – அப்பா – மகன் நடிக்கும் படம்…. ஏப்ரல் 21ல் ரிலீஸ்…. வெளியான அறிவிப்பு….!!!

தாத்தா அப்பா மகன் நடிக்கும் ஓ மை டாக் என்ற திரைப்படம் ஏப்ரல் 21-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை டாக். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கதைகளாக உருவாகியுள்ளதால் நிஜத்தில் தாத்தா அப்பா மகன் உறவுகளான நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகன் அர்னவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி அமேசன் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |