கர்நாடக மாநிலம் தும்கூரு என்ற பகுதியை சேர்ந்த நவீன்குமார்- ரேகா என்ற தம்பதிகளின் மகள் தவனி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிறுமியின் தாய்க்கு கால் ஊனமானது. மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 65 வயது முதியவர், பள்ளத்தில் ஆட்டோ சிக்கியதால் தலைகுப்புற கவிழ்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நாம் ஒன்று சேர்ந்து பள்ளத்தை சரி செய்யலாம் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது தாயாரும் பல பள்ளத்தால் உள்ளதால் நம்மால் அதை சரி செய்ய முடியாது. அதை முதலமைச்சர் தான் முன்னின்று நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தவனிக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அதிக அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அவரது பெற்றோர்கள் அவர் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு கிளாஸ் நீர் பருகும் போது ஒரு ரூபாய் அளிப்பது வழக்கம். இப்படி நான்கு நாட்களில் தினசரி 10 கிளாஸ் பருகி 40 ரூபாயை சேர்த்துள்ளார் .அதையே சாலை பள்ளங்களை சரி செய்வதற்கு முன் வந்து ஒரு வீடியோவாக எடுத்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் “தாத்தா சாலையில் உள்ள பள்ளங்களால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆதரவிழக்கும் குடும்பங்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த தொகையான 40 ரூபாயை இந்த பள்ளங்களை சரிசெய்ய அளிக்கின்றேன். உடனடியாக இதனை சரி செய்து கொடுங்கள்” என்று முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.