பிரிட்டன் இளவரசர் ஹரி குட்டி இளவரசர் பிலிப்பை சந்திக்க செல்வதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் வந்துள்ளார்.
அவர் பிரிட்டனை விட்டு வெளியேறியதால் தன் தாத்தாவின் சந்திப்பை இழந்துந்துவிட்டதாகவும் அதற்கு பதிலாக இப்போது புதிய இளவரசர் பிலிப்பை சந்திக்கப் போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி தன் சித்தப்பா மகள் இளவரசி யூஜீனி வீட்டிற்கு சென்றுள்ளார். இளவரசி யூஜீனி தன் தாத்தாவின் நினைவாக அவரின் பெயரையே அவரது குழந்தைக்கு வைத்துள்ளார். இதனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் நினைவாக குட்டி இளவரசர் பிலிப்பை பார்க்க செல்கிறேன் என்றும் இளவரசி யூஜீனியும் என்னுடைய தங்கை மட்டும் இல்லை அவள் என்னுடைய நெருங்கிய நண்பர் எனவும் தெரிவித்துள்ளார்.