தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு தங்கவேல். இவர் தாத்தையங்கார் பேட்டை அருகில் உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள நிலையில் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் இவர் நேற்று தாத்தையங்கார்பேட்டைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே வந்த சரக்கு வேன் தங்கவேலு மீது மோதியது.
இதனால் ஏட்டு தங்கவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விரைந்து வந்த தாத்தையங்கார் பேட்டை போலீசார் தங்கவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் விஜயனை கைது செய்துள்ளனர்.