Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தானாகவே முன்னோக்கி நகர்ந்து…. மருத்துவமனைக்குள் புகுந்த லாரி…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி முன்னோக்கி நகர்ந்து மருத்துவமனையின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு பெங்களூரு நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சீதாராம் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க விளக்கு எரியாமல் போனதால் கிருஷ்ணன் லாரியை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு புதிய பல்பு வாங்குவதற்காக கிருஷ்ணன் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது தானாகவே நகர்ந்து முன்னோக்கி சென்ற லாரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து விட்டது. அது இரவு நேரம் என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |