பரம ஏழை மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் அசரி பூத்(29). தனது தந்தையுடன் சென்ற மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது. அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் கடலுக்கு சென்றபோது மீன் கிடைக்காததால் வெறும் கையுடன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கடலில் மிதந்து கிடந்துள்ளது.
ஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்திருப்பது மிதக்கும் தங்கங்கள் என்பதை அறிந்துள்ளார். சுமார் 100 கிலோ அந்த அம்பேர்கிரிஸ் கட்டிகளை தொழிலதிபர் ஒருவர் அதற்கு ஏற்றார்போல கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலைபேசி கொடுப்பதாக மீனவரிடம் கேட்டுள்ளார். மாதம் 500 பவுண்டுகள் கூட கிடைக்காத பரம ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.6 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப்போகிறது. அதனுடைய மதிப்பு அதிகம் என்பதால் தரும் திருடு நடக்க வாய்ப்புள்ளது என்பதால் நரிஸ் காவல்துறையினரை உதவியை நாடியுள்ளார்.