Categories
உலக செய்திகள்

தான்சானியாவின் அதிபர் “புல்டோசர் மகுஃபுலி” மரணம்.. இது தான் காரணமா..? நீடிக்கும் மர்மம்..!!

தான்சானியா அதிபர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரின் மரணம் குறித்த மர்மம் நீடித்து வருகிறது.   

தான்சானியாவில் அதிபரான ஜான் போபே மகுஃபுலி(61) நேற்று மரணமடைந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதிக்கு பிறகு வெளியில் வரவில்லை. எனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரின் மரண செய்தி வெளியாகிவிட்டது.

1995 ஆம் வருடத்தில் தான்சானியா நாடாளுமன்றத்தின் போக்குவரத்து துறை அமைச்சரானார். இந்த காலத்தில் சாலையின் கட்டுமானத் துறை தொடர்பான நடவடிக்கையை இவர் மேற்கொண்ட விதத்தால் “புல்டோசர் மகுஃபுலி” என்று அழைக்கப்பட்டார்.

அதன் பின்பு கடந்த 2015 ஆம் வருடத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதன் பின்பு மீண்டும் கடந்த 2020 ஆம் வருடத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தாரா? என்பது குறித்த தகவல் வெளியாகாமல் மர்மமாகவே உள்ளது.

Categories

Tech |