குலசேகரன் பட்டினத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள பண்டகசாலை பகுதியைச் சேர்ந்தவரான கிளைண்டனின் மகன் 22 வயதுடைய ஸ்டெபின். இவர் அப்பகுதியில் உள்ள மீனவரின் உறவினர் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் பற்றி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் வீட்டார் ஸ்டெபினை கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மீனவரின் 15 வயதான சிறுமி நேற்று வீட்டு வாசலில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் தான் காதலித்து வரும் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை கேட்டு, அச்சிறுமியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். ஆனால் அவன் ,அச்சிறுமியை அவதூறாக பேசி , சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
பதட்டமடைந்த சிறுமி பயந்து அலறினார். அச்சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவனைப் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவன் தப்பிச்சென்றுவிட்டான். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். குலசேகரபட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன அமலோற்பவம் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.