Categories
சினிமா

“தான் செய்ததை தனுஷும் செய்யணும்”…. அவர் வேறு நான் வேறு…. ரஜினியின் விருப்பத்தை நிறைவேற்றாத தனுஷ்….!!!

தன்னை போல் தனுஷும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ரஜினி, ஐஸ்வர்யாவிடம் எனக்கும் லதாவுக்கும் கூட மன வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் பிரிந்து விடலாம் என எண்ணியிருக்கிறோம். இருப்பினும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் இருவரும் அனுசரித்து வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நீ உன் சந்தோசம் தான் முக்கியமென்று பிரிந்துவிட்டாய் எனக் கூறியுள்ளார் . ரஜினி தான் செய்தது போல் தனுஷூம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார். இதில் தவறில்லை என்றாலும் இதை செய்யும் சூழலில் தனுஷ் இல்லையாம். தனுஷ் கூறுவதாவது, “அவரின் நிலை வேறு என் நிலை வேறு. அவரின் படங்கள் வேறு என் படங்கள் வேறு என்னை அவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்” எனக் கூறுகின்றார். இந்நிலையில் வாழ்க்கையிலும் அவரின் வாழ்க்கை முறையை பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவினை தனுஷ் மாற்றிக் கொள்வாரா தனுஷ் என்ற சந்தேகம் எழுகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இடையே கடந்த 6 வருடங்களாக பிரச்சினை எழுந்துள்ள நிலையில் குழந்தைகளுக்காக பொறுத்திருந்து தற்பொழுது பிரிந்துள்ளனர்.

Categories

Tech |