Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தான் நடிக்கும் தமிழ் படங்களில் சொந்தமாக டப்பிங் பேசுவேன்”… புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷ்…!!!

நடிகர் யாஷ் இனி தமிழில் தான் நடிக்கும் திரைப்படங்களில் தானே டப்பிங் பேச உள்ளதாக கூறியுள்ளார்.

பிரபல நடிகரான யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே ஜி எஃப் 2. இத்திரைப்படத்தில் சஞ்சய்தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்கள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் இத்திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது நடிகர் யார் பேசியுள்ளதாவது தான் நடிக்கும் தமிழ் படங்களில் சொந்தமாக டப்பிங் பேச இருப்பதாக தனது விருப்பத்தை கூறியுள்ளார். இவ்வாறு யாஷ் பேசியதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |