Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக எரியும் மின்விளக்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

தாமதமாக எரியும் மின் விளக்குகளை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் புதிதாக  ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, காரைக்கால், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கிறது. அதுபோக மேரிஸ் கார்னரில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லும் மக்கள்  இந்த மேம்பாலம் வழியாக நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் முன்னதாக மேம்பாலத்தில் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது  இரவு 10 மணியிலிருந்து மறுநாள் காலை 10 மணி வரை மின் விளக்குகள் எரிகிறது. இதனால் அந்த மேம்பாலத்தில் செல்லும் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தாமதமாக எரியும் மின்விளக்குகளை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |